தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:29PM by PIB Chennai
மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் மத்தியப் பிரதேச அரசு இணைந்து, குவாலியர் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலத்தில் முதலீடு செய்யும் 25 நிறுவனங்களுக்கு விருப்பக் கடிதங்களை வழங்கும் விழாவை போபாலில் இன்று நடத்தின. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று, மண்டலத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தையும் அறிவித்தனர்.
தொலைத்தொடர்புச் சேவைகளில் முன்னணியில் உள்ள இந்தியா, இனி உற்பத்தித் துறையிலும் உலகளாவிய மையமாக மாற வேண்டும் என அமைச்சர் சிந்தியா வலியுறுத்தினார். புதுடெல்லி மற்றும் மும்பையில் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டங்களின் மூலம் சுமார் 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹5,500 கோடி முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன.
சுமார் 170 ஏக்கரில் அமையவுள்ள இம்மண்டலத்தில் தொலைத்தொடர்பு உபகரணங்கள், ஆப்டிகல் ஃபைபர், மென்பொருள் மற்றும் உள்கட்டமைப்புத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338585®=3&lang=1&_gl=1
****
TV/NB/SH