இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:12PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் மற்றும் மகாராஷ்டிர அரசு இணைந்து புனேவில் நடத்திய தேசிய மழைநீர் சேகரிப்பு இயக்கம்' குறித்த உயர்நிலைக் கூட்டத்தில், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் பங்கேற்று ஆய்வு செய்தனர்.
300-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இலக்குகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதல்வர் ஃபட்னவிஸ் உறுதி அளித்தார்; மக்கள் பங்கேற்பு மற்றும் இதர திட்டங்களுடன் ஒருங்கிணைந்து நீர் பாதுகாப்பை வலுப்படுத்த அமைச்சர் சி.ஆர். பாட்டீல் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338545®=3&lang=1&_gl=1
****
TV/NB/SH