இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:06PM by PIB Chennai
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (சிபிஎன்) ராஜஸ்தான் அலகு அதிகாரிகள், நவம்பர் 18 அன்று ராஜஸ்தானின் கோட்டா புறவழிச்சாலை அருகே உள்ள தொங்கு பாலம் சுங்கச்சாவடியில் காரில் கடத்தப்பட்ட 16.43 கிலோ சட்டவிரோத அபின் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். ஜலாவரில் இருந்து ஜெய்ப்பூருக்கு அபின் கடத்தப்படுவதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நடைபெற்ற வாகன சோதனையில், காரின் கூடுதல் சக்கரத்திற்குள் 9 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அபின் கண்டெடுக்கப்பட்டது. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டம், 1985-ன் கீழ் போதைப்பொருள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கடத்தல் வலையமைப்பின் பின்னணி குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டில் அக்டோபர் வரை நாடு முழுவதும் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவுகள் 62 வழக்குகளில் சுமார் 432 கிலோ அபினைப் பறிமுதல் செய்து 74 பேரைக் கைது செய்துள்ளன. ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற இலக்கை அடைய, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து தீவிர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338539®=3&lang=1&_gl=1
****
TV/SE/SH