இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 8:36PM by PIB Chennai
18.11.2026 நிலவரப்படி, சென்னைத் துறைமுகம் ஒரே நேரத்தில் மூன்று கப்பல்களில் அரிசி ஏற்றுமதி பணிகளை சீராக மேற்கொண்டு வருகிறது. தெற்குத் தளத்தில் எம். வி. ஹெச்டிபி லக்கி, ஜேடி 1 தளத்தில் எம்.வி. இம்பீரியல் வரலக்ஷ்மி, ஜேடி V தளத்தில் எம். வி. அசோகன் சாந்த்ரா ஆகிய கப்பல்களில் அரிசி ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. 2026 ஏப்ரல் முதல் நவம்பர் 18 வரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2.03 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்து, சென்னைத் துறைமுகம் இதுவரை இல்லாத அளவிலான வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இந்தச் சாதனை, துறைமுகத்தில் சரக்குக் கையாளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பங்குதாரர்களுக்கும் இடையிலான செயல்பாட்டுத் திறனையும், ஒருங்கிணைப்பையும் எடுத்துரைக்கிறது.

இந்த மைல்கல்லை அடைவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஏற்றுமதியாளர்களும், முகவர்களும் வெளிப்படுத்திய ஒருங்கிணைப்பையும், குழுப்பணியையும் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு சச்சின் எஸ். குர்வே, பாராட்டினார். தொடர்ச்சியான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், வாடிக்கையாளர் திருப்தியில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மொத்த சரக்குக் கையாளுதலுக்கான முதன்மையான நுழைவாயிலாகத் தனது இடத்தைச் சென்னைத் துறைமுகம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338156®=48&lang=2
****
SK/RB/RJ