தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 8:19PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), ‘தொலைத்தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் டிஆர்எம் அடிப்படையிலான டிஜிட்டல் முகவரியிடல் அமைப்புகளின் வரைவுத் தணிக்கைக் கையேடு’ (வரைவு டிஆர்எம் தணிக்கைக் கையேடு) ஆவணத்தை 2026 அக்டோபர் 9-ம் தேதி வெளியிட்டு, பங்குதாரர்களின் கருத்துகளைக் கோரியிருந்தது. இதற்கான கடைசித் தேதி அக்டோபர் 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது, மேற்படி வரைவு டிஆர்எம் தணிக்கைக் கையேட்டின் மீது கருத்துகளைச் சமர்ப்பிக்க மேலும் அவகாசம் வழங்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், எழுத்துப்பூர்வக் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 2026 நவம்பர் 19-ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிப்பு கோரும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
கருத்துகளை முன்னுரிமை அடிப்படையில் மின்னணு வடிவில் advbcs-2@trai.gov.in மற்றும் jtadvbcs-3@trai.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். விளக்கம் அல்லது கூடுதல் தகவல்களுக்கு, ஆலோசகர் (ஒலிபரப்பு மற்றும் கேபிள் சேவைகள்) டாக்டர் தீபாலி சர்மாவை +91-11-20907774 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337633®=3&lang=1
***
SK/SE/PS