சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடலோரப் பகுதிகள், பெருங்கடல்களைப் பாதுகாக்க சிறிய தீவு நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா விருப்பம்: ஐநா பருவநிலை மாநாட்டில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 4:29PM by PIB Chennai

துருக்கியின் அண்டாலியாவில் நடைபெறும் ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டின் (சிஓபி 31) அமைச்சர்கள் நிலையிலான உயர்நிலைக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், கடலோரப் பகுதிகள், பெருங்கடல்களின் பாதுகாப்பிற்காக வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளுடன் இந்தியா தனது கூட்டாண்மையை வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், எரிசக்தி & வளங்கள் நிறுவனம் (டெரி), சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் மொரீஷியஸ், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், ஃபிஜி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடல்நீர் மட்டம் உயர்வு, கடல் அரிப்பு ஆகிய சவால்களை எதிர்கொள்ள சுமார் 11,099 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியக் கடற்கரையில் செயல்படுத்தப்படும் மிஷ்டி சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்புத் திட்டம், முன்னெச்சரிக்கை அமைப்புகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக அமைச்சர் கூறினார். மேலும், கடலோர அபாய மதிப்பீடு, சுற்றுச்சூழல் மீட்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு ஆகிய 4 முன்னுரிமைத் துறைகளில் இணைந்து செயல்பட சிறிய தீவு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337456®=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337658) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी