சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 6:06PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய-மாநில அரசுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்தும் ‘சமாவேஷி நிதி சங்கல்ப்’ (Samaveshi Niti Sankalp) இரண்டு நாள் மாநாடு புதுடெல்லி சுஷ்மா ஸ்வராஜ் பவனில் தொடங்குகிறது.
போதையில்லா பாரதம், 'ஒரே நாடு ஒரே கல்வி உதவித்தொகை தளம்', மாற்றுத்திறனாளி மாணவர்களின் மேம்பாடு மற்றும் 'சுகம்ய பாரத்' ஆகிய நான்கு முக்கியத் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. 450-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 13,500-க்கும் அதிகமான கருத்துகளின் அடிப்படையில் இம்மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
'சமாவேஷ்' மற்றும் 'இ-அனுதான்' (e-Anudan) போன்ற டிஜிட்டல் தளங்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளார்.
இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
****
SK/NB/SH