இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 4:52PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி, பழங்குடியின மக்கள் மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சர் திரு ஜிஜேந்திர சிங் கலந்து கொண்டு, பழங்குடியினர் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப தொகுப்பு குறித்த கையேட்டை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் திரு ஜிஜேந்திர சிங், சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா, சமூகநீதிக்காகவும், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர் என தெரிவித்தார். காடுகள், ஆறுகள், மலைகள் ஆகியவற்றுடன் இணக்கமாக வாழும் பழங்குடியினர், பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாவலர்களாக விளங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார். நவீன அறிவியல், டிஜிட்டல் கல்வி ஆகியவை பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவை வழிநடத்த உதவும் எனவும் கூறினார். குறிப்பாக, வடகிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், திறன்களை ஊக்குவித்தல், நிதி உதவி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை அடைய வேண்டும் எனில், பழங்குடியின மக்கள், குக்கிராமங்களில் வசிப்போருக்கு அதிகாரமளிப்பது மிகவும் அவசியம் எனவும் அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337491®=3&lang=1
****
SK/LN/SH