இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 10:04PM by PIB Chennai
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், 3-வது தேசிய சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல் & நுண்ணறிவு மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் புதுதில்லியில் நேற்று நிறைவடைந்தன.
மாநாட்டில், பயனர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் 'சைபர்வைட்டல்ஸ்' மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 'சைபர் குஸ்தி 2026' ஹேக்கத்தான் போட்டியும் தொடங்கி வைக்கப்பட்டது.
உள்நாட்டு சைபர் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், ஆந்திராவின் அமராவதியில் குவாண்டம் & செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழக வளாகத்தை அமைத்தல் குறித்து தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் எம் எம் திரிபாதி விளக்கினார். பாஷினி, ஐபிஎம் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இம்மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் டாக்டர் சந்தீப் மிட்டல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நாடு முழுவதும் தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களைப் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337227®=3&lang=1
***
PD/NB/GS