நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் வருமான வரித்துறை சார்பில் அரங்கம் திறப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 7:06PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால், புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2026-ல், வரி செலுத்துவோருக்கான சிறப்பு அரங்கைத் திறந்து வைத்தார். 2026 நவம்பர் 27 வரை பொதுமக்கள் இதைப் பார்வையிடலாம். 507 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரங்கு, இந்தியாவின் பாரம்பரியத்தையும் நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்கிறது.

 வருமான வரி தொடர்பான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

மின்னணு வருமான வரித் தாக்கல், பான் அட்டை சேவைகள், செயற்கை நுண்ணறிவு உதவி, புகார் தீர்வு, சர்வதேச வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு ஆறு உதவி மையங்கள் இங்கு செயல்படுகின்றன. முதியோருக்காகத் தனி உதவி மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவல் கையேடுகள், வருமான வரி குறித்து சிறுவர்களுக்கு விளக்கும் நூல் ஆகியவையும் இந்த அரங்கில் வெளியிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337105®=3&lang=1

(Release ID : 2337105)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337206) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी