சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி வளாகத்தை 2027 ஜனவரி 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 4:46PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி சென்னை), 2027 ஜனவரி 2 முதல் 4 வரை வளாகத்தில் நடைபெறவுள்ள நிறுவன திறந்தவெளி வளாகம் 2027 நிகழ்வில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைவருக்கும் ஐஐடிஎம் – ஐஐடி சென்னை என்ற முன்முயற்சியின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் இந்நிகழ்வு, வருடாந்திரத் தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா 2027-க்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோர் ஐஐடி சென்னையின் ஆராய்ச்சிச் சூழலை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. ஆர்வமுடையவர்கள் 2026 நவம்பர் 30-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக shaastra.org/open-house என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக பார்வையாளர்களை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோட்டி, குறிப்பாகக் கிராமப்புற, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் அறிவியல், தொழில்நுட்பம் எளிதில் சென்றடைவதை உறுதி செய்வதே இம்முன்முயற்சியின் நோக்கம் என்று தெரிவித்தார். இதன் மூலம் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு எதிர்காலப் புதுமைக்கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்

நிறுவன திறந்தவெளி வளாகம் 2027 நிகழ்வில், மாணவர்கள், பேராசிரியர்களின் புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் சுமார் 80 அரங்குகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் 18 துறைகளின் கீழ் செயல்படும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 சிறப்பு மையங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களைப் பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 250 நகரங்களைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 35,000 பார்வையாளர்கள் வருகை தந்த  2026-ம் ஆண்டு நிகழ்வைத் தொடர்ந்து, எதிர்வரும் நிகழ்வில் 95,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளும், 60,000-க்கும் அதிகமான பார்வையாளர்களும் எதிர்பார்க்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் வளாகத்திற்குள் எளிதாகச் சென்று வர, டிஜிட்டல் வரைபடங்கள், செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலி, நிகழ்நேரக் கூட்டக் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளன.

****

SK/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337189) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English