பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உரிமை கோரப்படாத ஈவுத்தொகை கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 2:51PM by PIB Chennai

மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதலீட்டாளர்கள் கல்வி, பாதுகாப்பு நிதி ஆணையம், இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் சார்பில், முதலீட்டாளர்கள் குறைதீர் நிகழ்ச்சி 2026 நவம்பர் 17-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்றது. முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் உரிமை கோரப்படாத ஈவுத்தொகை,  முதலீட்டாளர்கள் கல்வி, பாதுகாப்பு நிதி ஆணையத்திற்கு மாற்றப்பட்ட பங்குகள், உரிமைகோரல் உள்ளிட்ட சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில், இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்கோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், நிறுவனங்களிடம் இருந்து 7 ஆண்டுகளாக கோரப்படாமல் இருக்கும் நிலுவைத்தொகையை பெறவும், பங்குகளை மீட்டெடுக்கவும் நேரடி உதவி வழங்கப்பட்டது. வாடிக்கையாளர் விவரங்களை புதுப்பித்தல், வாரிசுகள் நியமனம் தொடர்பான சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336869&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337172) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR