இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2026 6:22PM by PIB Chennai
யதார்த் ஹாஸ்பிடல் அண்ட் ட்ராமா கேர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில பங்குரிமைகளை ரஸ்மலாய் லிமிடெட் கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட இணைப்பு, யதார்த் ஹாஸ்பிடல் அண்ட் ட்ராமா கேர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள சில பங்குரிமைகளை ரஸ்மலாய் லிமிடெட் கையகப்படுத்துவது தொடர்பானதாகும்.
ரஸ்மலாய், சைப்ரஸில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். முதலீடுகளை வைத்திருப்பதே அதன் முக்கியச் செயல்பாடாகும். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் எவ்விதச் செயல்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை; இந்தியாவில் அதன் இருப்பும் இல்லை. யதார்த் ஹாஸ்பிடல், இந்தியாவில் உயர் சிறப்பு மருத்துவமனைகளின் கட்டமைப்பை இயக்குவதுடன், பல சிறப்புத் துறைகளில் விரிவான சுகாதார சேவைகள், நோயறிதல், மேம்பட்ட மருத்துவ செயல்முறைகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336259®=3&lang=1
***
AD/RB/RJ