அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இத்தாலியில் உள்ள சர்வதேச இயற்பியல் மையத்துடனான ஒத்துழைப்பை இந்தியா மேலும் வலுப்படுத்தவுள்ளது : மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 3:59PM by PIB Chennai

இத்தாலியின் ட்ரைஸ்டே நகரில் செயல்படும் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையமான ஐசிடிபி-யும் இந்தியாவும் இணைந்து, ‘இந்தியா-ஐசிடிபி ஒத்துழைப்பு நிதியத்தைத் தொடங்கியுள்ளன. இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச அளவில் அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அறிவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

இதற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை - இத்தாலியின் ஐசிடிபி ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலி சென்றுள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

இந்த நிதி, இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களின் சர்வதேசப் பங்கேற்பை அதிகரிக்கும் என ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார். இதில் இத்தாலியுடன் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இயற்பியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் உயர்நிலை ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி ஆகியவற்னை வழங்கும் முன்னணி மையமாக இத்தாலியின் ஐசிடிபி விளங்குகிறது. இந்தியாவின் சில முன்னணி பல்கலைக்கழகங்கள், ஐஐடி-கள் ஆகியவை ஏற்கெனவே இம்மையத்துடன் ஆராய்ச்சி, பயிலரங்குகள், பரிமாற்றத் திட்டங்களில் இணைந்து செயல்படுகின்றன.

இந்தப் புதிய முயற்சி, இருநாடுகளின் அறிவியல் உறவை மேலும் மேம்படுத்துவதோடு, ஆராய்ச்சியாளர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336519&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336607) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी