இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 3:59PM by PIB Chennai
பொது சேவைப் பணிகளில் (அரசுப் பணி) நேர்மை, நெறிமுறைகள் குறித்த உயர்நிலை கலந்துரையாடல் கூட்டம் 2026 நவம்பர் 14 அன்று சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. மத்திய சரக்கு, சேவை வரித்துறை (ஜிஎஸ்டி), சுங்கத்துறையின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி, சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் எஸ்.கே. விமலநாதன், சிறப்பு விருந்தினரை வரவேற்றார். வரி நிர்வாகம், மக்களுக்கான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அதிகாரிகளுடன் இணைந்து வாசித்து உறுதிமொழி ஏற்கச் செய்தார். தன்னலமற்ற சேவை, கடமை உணர்வு, நம்பிக்கை ஆகியவற்றின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். நேர்மையைச் சட்டக் கடமையாக மட்டும் கருதாமல், அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இது ஜனநாயக அமைப்புகளையும் மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற 1,400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேர்மையான நிர்வாகம், உயர்ந்த அறநெறிகள், நாட்டுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர்.
*******
AD/PLM/RJ