பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் சில்காவில் 3,358 வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 8:40PM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சில்கா பயிற்சி மையத்தில், 02/26 அணியின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று (2026 நவம்பர் 13) நடைபெற்றது. இதில், 3,358 வீரர்கள் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இவர்களில் 142 பெண்கள் உட்பட 2,756 அக்னிவீரர்கள், கடற்படையைச் சேர்ந்த 286 மருத்துவ உதவியாளர்கள், இந்தியக் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 316 மாலுமிகள் இடம்பெற்று இருந்தனர்.

கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் அணிவகுப்பில் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வீரர்களின் சீருடை, அணிவகுப்பு ஒழுங்கு ஆகியவற்றைப் பாராட்டிய அவர், ஒழுக்கம், நேர்மை, தொழில்முறைத் திறன் ஆகியவற்றைக் கடைப்பிடித்து நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

சிறந்த பயிற்சி வீரர்களுக்குப் பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336100&reg=3&lang=1

(Release ID : 2336100)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336230) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu