தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்பு சந்தாதாரர் தரவுகளின் முக்கிய அம்சங்கள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 3:14PM by PIB Chennai

தொலைத்தொடர்பு சந்தாதாரர் குறித்த தரவுகளை (செப்டம்பர் 2026 மாதம் வரை) இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை, நாட்டின் தொலைத்தொடர்பு துறையின் ஒட்டுமொத்த செயல்பாட்டு நிலை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இதில் தொலைபேசி, பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை, மொபைல், லேண்ட்லைன் இணைப்புகளின் விவரங்கள், நகர்ப்புற, கிராமப்புறங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், தொலைத்தொடர்பு இணைப்புகள், செயல்பாட்டில் உள்ள மொபைல் பயனர்கள் ஆகியவை தொடர்பான  கோரிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் உள்ளன.

செப்டம்பர் 2026 மாதத்தில், 16.77 மில்லியன் சந்தாதாரர்கள், மொபைல் எண் மாற்றத்திற்கான கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

செப்டம்பர் 2026-ல், செயல்பாட்டில் இருந்த கம்பிவடம் இல்லாத  (மொபைல்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1212.80 மில்லியனாக இருந்தது.

இந்த ஊடகச் செய்தியில் உள்ள தகவல்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328945&reg=3&lang=1  

***

(Release ID: 2328945)

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336179) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी