சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி: இதுவரை ரூ.88.36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 9:10PM by PIB Chennai

தில்லி ஐஎன்ஏ பகுதியில் உள்ள தில்லி சந்தைப் (ஹாட்) பகுதியில் நடைபெற்று வரும் ஷில்ப் சமகம் எனப்படும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், நேற்று (2026 நவம்பர் 12) வரை ரூ.88.36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன. 2026 நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த 15 நாள் கண்காட்சியை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்துகிறது.

இக்கண்காட்சியில் பட்டியல் வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள் போன்றவர்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

130-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கைத்தறி ஆடைகள், பாரம்பரியக் கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏழு கருப்பொருள் பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெறுகின்றன.

மத்திய அரசின் நான்கு நிதி நிறுவனங்கள் மூலம் கலைஞர்களுக்கு இலவச அரங்குகள், பயணச் செலவு, தினசரிப் படி, பொருட்களைக் கொண்டு செல்வதற்கான வசதிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இக்கண்காட்சிகள் மூலம் ஏராளமான கைவினைக் கலைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து, அவர்களின் தயாரிப்புகளுக்கு நேரடிச் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336047&reg=3&lang=1

(Release ID: 2336047)

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336176) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी