சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1.4 கோடி மதிப்பிலான 4 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 5:56PM by PIB Chennai

பாங்காக்கிலிருந்து 2026 நவம்பர் 12 அன்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த பயணி ஒருவரை சென்னை சுங்கத்துறையின் விமானப் போக்குவரத்து நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது பெட்டியை விரிவாக ஆய்வு செய்ததில், அதன் அடிப்பகுதியில் ரகசிய அறை அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த  காற்றுப்புகாத 4 பைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பைகளில் உயர்தர நீரியல் முறையில் வளர்க்கப்பட்ட உலர்ந்த பச்சை-பழுப்பு நிறப் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் 4 கிலோ எடையுள்ள இந்தப் போதைப்பொருளின் சர்வதேசச் சந்தை மதிப்பு ரூ.1.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கண்டறியும் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் இது போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்புச் சட்டம், 1985-ன் கீழ், அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை சுங்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336066) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English