சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 7:54PM by PIB Chennai
நிதி நெருக்கடி மற்றும் சமூகச் சவால்கள் இருந்தபோதிலும், ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த திரு அர்ஜுன் நாயக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), உயர்கல்வியைத் தொடரவும், ஆராய்ச்சி, கற்பித்தல் துறையில் ஒரு பணியை உருவாக்கிக்கொள்ளவும், மானுடவியல் துறை மூலம் சமூகத்திற்குப் பங்களிக்கவும் விரும்பினார்.
உயர்கல்வி, ஆராய்ச்சியில் ஈடுபடும் தகுதியுள்ள மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் பட்டியலின மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை (என்எஃப்எஸ்சி) திட்டத்தின் மூலம், திரு அர்ஜுன், 2017-ம் ஆண்டு முதல் உதவித்தொகை பெறத் தொடங்கினார்.இதன் ஒரு பகுதியாக, அவருக்கு மாதம் ரூ. 16,000 உதவித்தொகையுடன், வீட்டு வாடகைப்படியும், இதர செலவுகளுக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டன.
உதவித்தொகை ஆதரவுடன், தனது தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம், அவர் மானுடவியலில் தனது முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். தற்போது புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் அவர் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336006®=3&lang=1
****
SK/BR/SH