இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 6:32PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம், தூய்மையையும் நிர்வாகத் திறனையும் மேம்படுத்தும் சிறப்புப் இயக்கம் 6-ன் கீழ் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் வருமான வரி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட பழைய பொருட்கள் அகற்றும் பணிகள் மூலம் 1.54 லட்சம் சதுர அடி அலுவலக இடம் பயன்பாட்டுக்கு மீட்கப்பட்டுள்ளது. தேவையற்ற பழைய பொருட்களை விற்றதன் மூலம் ரூ.36.9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
பொதுமக்களின் 29,153 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 15,081-ஐ விட அதிகமாகும்.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மின்னணுக் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு, அதன் மூலம் ரூ.17.66 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கொல்கத்தா, ஒடிசா, குஜராத் பகுதிகளில் கழிவுப் பொருட்களைக் கொண்டு கலைப் படைப்புகள் உருவாக்கப்பட்டன.
தூய்மையை அதிகரித்து, பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதில் வருமான வரித்துறை தனது உறுதிப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335973®=3&lang=1
(Release ID : 2335973)
****
SK/PLM/SH