இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 7:08PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமைக்கு (NRIDA), சாலைத் தொழில்நுட்பத்தில் புதுமை படைத்ததற்காக 2025-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், ஜார்க்கண்டில் 2022-23-ல் அனுமதிக்கப்பட்ட 381.57 கிலோ மீட்டர் சாலைப் பணிகளில், தொழிற்சாலைக் கழிவான எஃகு கசடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்டுமானச் செலவு 26 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே எஃகு ஆலைகள் உள்ளதால் போக்குவரத்துச் செலவும் குறைந்துள்ளது.
இந்த விருது 2026 நவம்பர் 19 அன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறும் இந்திய சாலைப் பேரவையின் 85-வது ஆண்டு மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 1,81,923 கிலோ மீட்டர் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் 1,39,901 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335993®=3&lang=1
(Release ID : 2335993)
****
SK/PLM/SH