சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 6:52PM by PIB Chennai
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ‘நமஸ்தே’ திட்டத்தால், புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் பணியாற்றும் 56 வயது தூய்மைப் பணியாளர் ராமசாமியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளாகப் போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் கால்வாய், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ததால், தோல் தொற்று, காயங்கள் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளைச் சந்தித்தார். இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் வருமான இழப்பும் ஏற்பட்டது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தைப் பராமரிக்க சிரமப்பட்டார்.
2025-ல் மத்திய அரசின் நமஸ்தே திட்டத்தின்கீழ் பாதுகாப்பு உடை, கையுறைகள், காலணிகள், முகக்கவசம், தலைக்கவசம் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன. மேலும், பாதுகாப்பாகப் பணிபுரிவது, ஆபத்துகளைத் தவிர்ப்பது குறித்த பயிற்சியும், சமூகப் பாதுகாப்பு உதவிகளும் அளிக்கப்பட்டன.
இதனால் உடல்நலப் பாதிப்புகள் குறைந்து, தொடர்ந்து அவரால் பணி செய்ய முடிந்தது. தற்போது அவரது மாத வருமானம் ரூ.8,000-லிருந்து ரூ.12,000 ஆக, 50 சதவீதம் உயர்ந்தது. குடும்பத்தின் பொருளாதார நிலையும் மேம்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335988®=3&lang=1
(Release ID : 2335988)
****
SK/PLM/SH