புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 2026-க்கான நுகர்வோர் விலைக் குறியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 4:00PM by PIB Chennai

அக்டோபர் 2026-ல் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம் 6.09% ஆகும்.

நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில், அக்டோபர் 2026-ல் ஆண்டு உணவுப் பணவீக்கம் 8.94 % ஆகும்.

முக்கிய புள்ளிவிவரங்கள்:

தேசிய அளவிலான குறியீடுகள்:

2024-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், அக்டோபர் 2025 உடன் ஒப்பிடுகையில் அக்டோபர் 2026-க்கான ஆண்டு பணவீக்க விகிதம்  6.09% (தற்காலிகம்) ஆகும். கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான தொடர்புடைய பணவீக்க விகிதங்கள் முறையே  6.63%, 5.41 % ஆகும்.

உணவுப் பணவீக்கம்:  அகில இந்திய நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில், அக்டோபர் 2025 உடன் ஒப்பிடுகையில் அக்டோபர் 2026-க்கான ஆண்டு பணவீக்க விகிதம் 8.94% (தற்காலிகம்) ஆகும். கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான தொடர்புடைய பணவீக்க விகிதங்கள் முறையே 9.09%, 8.68 % ஆகும்.

2026 அக்டோபர் மாதத்தில், அகில இந்திய அளவில் பணவீக்கம் குறைவாக இருந்த முக்கிய 5 பொருட்களாக உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தேங்காய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335416&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335632) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada