குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து தங்கள் கனவுகளை நனவாக்க உழைக்க வேண்டும் – குடியரசுத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 2:56PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுடன் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2026 நவம்பர் 12) உரையாடினார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்ததினத்தையொட்டி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் பழங்குடியின கௌரவ இயக்கத்தின் ஒரு பகுதியாக பழங்குடியினர் நல அமைச்சகம் இந்த உரையாடலுக்கு ஏற்பாடு செய்தது.

அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய நாடு முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் வளர்ச்சியடைவது அவசியம் என்று கூறினார். ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகள், பழங்குடியினர் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பது மட்டுமின்றி, அவர்களுடைய பன்முக திறன்களை மேம்படுத்த வாய்ப்பளிப்பதாக குறிப்பிட்டார். நமது நாட்டின் திறமைக்கு குறைவில்லை என்று தெரிவித்த அவர், உரிய வாய்ப்புகளும், சாதமான சூழ்நிலைகளும், முறையான வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு தேவைபடுவதாக கூறினார். ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில்  மாணவர்களும், மாணவிகளும் சம எண்ணிக்கையில் பயின்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நாட்டின் முன்னேற்றத்திற்கு சான்றாகும் என்று தெரிவித்தார்.

மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் தங்கள் கனவுகளை நனவாக்க உழைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். கல்வி என்பது வெறும் வாழ்வாதரத்திற்கான கருவியாக மட்டுமின்றி தாங்கள் பெற்ற அறிவின் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார். இளைஞர்கள் வேலை அளிப்பவர்களாக திகழும் போது நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மேலும் விரைவு பெறும் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335376&reg=3&lang=1

***

TV/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335412) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी