மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேந்திரிய வித்யாலயா அமைப்பின் முன்னோடி டிஜிட்டல் திட்டங்கள்: மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 2:44PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, கேந்திரிய வித்யாலயா அமைப்பின் 3 முன்னோடி டிஜிட்டல் திட்டங்களை புதுதில்லியில் இன்று (2026 நவம்பர் 12) தொடங்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ‘சமிக்ஷா’ செயற்கை நுண்ணறிவு செயலி, பெற்றோர்களை இணைக்கும் கேவிஎஸ்-சம்வாத் கைப்பேசி செயலி, இணையதளம், கேவிஎஸ் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்புக்கான இணையதளம் ஆகியவை இதில் அடங்கும். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும், டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் இத்திட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் பாராட்டினார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைக் கடந்து, நாட்டின் ஒட்டுமொத்த பள்ளிக் கல்விச் சூழலமைப்பில் இணைந்துள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டைக் கண்காணிக்க, அவர்களின் பயிற்சி நிலை, முந்தைய பயிற்சி விவரங்கள், பயிற்சிக்கான தேவைகள் குறித்த முழுமையான தரவுகளை இணையதளத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘சமிக்ஷா’ செயற்கை நுண்ணறிவுத் தளம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவு, கல்வித் திறன், பள்ளி உள்கட்டமைப்பு குறித்த நிகழ்நேரத் தரவுகளை பகுப்பாய்வு செய்து உரிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. கேவிஎஸ் சம்வாத் செயலி மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வருகைப்பதிவு, பாடத்திட்ட முன்னேற்றம், தேர்வு முடிவுகள், டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பெறுவதுடன், சான்றிதழ்கள், விடுப்பு ஆகியவற்றிற்கும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். முன்னாள் மாணவர்களுக்கான இணையதளம் மூலம் முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுடன் மீண்டும் இணைந்து வழிகாட்டுதல், நிறுவன மேம்பாட்டிற்குப் பங்களிக்க முடியும். கேந்திரிய வித்யாலயா தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இத்தளங்கள், கல்விச் சேவைகளை எளிதாகவும், வெளிப்படையாகவும் மாற்றுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335366&reg=3&lang=1    

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335396) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English