இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 7:56PM by PIB Chennai
இந்தியக் கடற்படைக் கப்பலான (ஐஎன்எஸ்) திரிசூல், எகிப்தின் சஃபாகா கடற்படைத் தளத்தில் மேற்கொண்டிருந்த பயணத்தை 2026 நவம்பர் 9 அன்று நிறைவு செய்தது.
இந்தப் பயணத்தின் போது, ஐஎன்எஸ் திரிசூலின் அதிகாரி, எகிப்தின் செங்கடல் கடற்படைத் தளத்தின் தளபதியான ரியர் அட்மிரல் அப்துல் மக்ஸூத்தை சந்தித்தார். சூயஸ் வளைகுடாவின் கடல்சார் பாதுகாப்பு, செங்கடலின் உத்திசார் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. கப்பல் குழுவினர், எகிப்திய கடற்படைக் கப்பலான ஈஎன்எஸ் போர்ட் சயீத் (976)-ஐயும் பார்வையிட்டு, அதன் செயல்பாட்டுத் திறன்கள், எகிப்திய கடற்படையால் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்த தகவல்களைப் பெற்றனர்.
இந்தப் பயணம், இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான நீண்டகால பாதுகாப்பு உறவுகளையும், கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான அவற்றின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335192®=48&lang=2
***
SK/RB/RJ