மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

வலுவான இந்தியாவை உருவாக்கத் திறமையான அதிகாரிகளும், அமைப்புகளும் அவசியம்: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 7:35PM by PIB Chennai

வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க, மக்களின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் விரைந்து செயலாற்றும் திறமையான அதிகாரிகளும், வலுவான அமைப்புகளும் அவசியம் என்று மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய காவல்பணி (ஐபிஎஸ்)  பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், காவல்துறையினர் பொதுமக்களுடன் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களின் தேவைகளையும் சவால்களையும் கேட்டறிந்து செயல்பட வேண்டும் என்றார்.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதே திறமையான காவல் துறைக்கு முதன்மை அடித்தளமாகும். நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் உடனடி நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை இளம் அதிகாரிகள் பெற வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அமைப்பாக மட்டுமின்றி, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நம்பிக்கையான அமைப்பாகக் காவல் துறை திகழ வேண்டும்.குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நவீனத் தொழில்நுட்பங்கள், தரவு பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335179&reg=48&lang=2

****

SK/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335223) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी