சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதியோருக்கு உதவுவதற்கான தன்னார்வலர்களாக பதிவு செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 8:27PM by PIB Chennai

முதியோருக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், 'முதியோருக்கு மதிப்பளிக்கும் தேசிய இயக்கம்' (Vayo Samman Rashtriya Abhiyan) தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 'முதியோர் நண்பர்கள்' (Vayo SAATHI) திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய அனைவரும் தன்னார்வலர்களாகப் பதிவு செய்யலாம் என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

முதியோருக்கு டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்த உதவுதல், அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குதல், இணைய மோசடிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உடல்நலம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், முதியோரின் சமூகப் பங்கேற்பை மேம்படுத்துதல் ஆகியவை தன்னார்வலர்களின் பணிகளாகும். பங்கேற்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

https://seniorcitizen.dosje.gov.in/vayo-sathi என்ற இணையதள இணைப்பின் மூலமும், ஜீவன் (JEEVAN) என்ற கைப்பேசி செயலி மூலமும் இளைஞர்கள் பதிவு செய்யலாம்.

'இணைதல், உரையாடல், இணைந்து செயல்படுதல், பங்களித்தல், தொடர்ந்து பங்கேற்று செயலாற்றுதல்' என்ற ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இந்த இயக்கம் செயல்படும். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் இதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன. முதியோரை நலத்திட்டப் பயனாளிகளாக மட்டுமின்றி, அனுபவமும் அறிவும் நிறைந்த சமூக வழிகாட்டிகளாக அங்கீகரிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334825&reg=3&lang=1

(Release ID : 2334825)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334849) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Gujarati