சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தர நிலைகள் குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் : ஸ்ரீவிஜயபுரத்தில் நடத்தியது பிஐஎஸ்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 8:13PM by PIB Chennai

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம், அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தின் குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் இயக்குநரகத்துடன் இணைந்து, தரநிலையாக்கம் குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் / கருத்தரங்கை 2026 நவம்பர் 4,  5 ஆகிய தேதிகளில் ஸ்ரீ விஜயபுரத்தில்  நடத்தியது.

மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழில்துறையினர் ஆகியோரிடையே இந்தியத் தரநிலைகள், தரம், பாதுகாப்பு, தரநிலையாக்கம், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

முதல் நாள் பயிலரங்கம் மாணவர்கள், கல்வி நிறுவனப் பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 50 மாணவர்கள் பங்கேற்றனர். பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானியும் துணை இயக்குநருமான திரு. சாய் சந்திரா, வரவேற்புரையாற்றி, பயிலரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தார். மாணவர்களிடையே தரநிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிஐஎஸ் மேற்கொண்டு வரும் பிஐஎஸ் தரநிலைக் குழுக்கள் தொடர்பான முயற்சிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இரண்டாம் நாள் காலை அமர்வு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் இயக்குநரகத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 75 அலுவலர்கள் பங்கேற்றனர்.

இரண்டாம் நாள் பிற்பகல் அமர்வில் தொழில்துறையினருக்கானஙபயிலரங்கம் நடைபெற்றது. இதில் சுமார் 25 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியத் தரநிலைகளை பரவலாக எடுத்துச் செல்வதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் பிஐஎஸ், அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334846) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English