நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரயாக்ராஜில் 11 அரசு குடியிருப்புகள் மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது: மத்திய நிதி அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 2:14PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நிலம் பணமாக்கல் கழகம் சார்பில், உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள 11 அரசு குடியிருப்புகளின் மின்னணு ஏலத்திற்கான விருப்பக்கோரல் முன்மொழிவை வெளியிட்டுள்ளது. வீடு வாங்க விரும்புவோர், தனிப்பட்ட முதலீட்டாளர்கள், தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்கல் ஆகியோர் இந்த குடியிருப்புகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையுடன் நடைபெறவுள்ள மின்னணு ஏலமுறையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முயர் சாலை, தோர்ன்ஹில் சாலை, சிவில் லைன்ஸ் ஆகிய இடங்களில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி, வணிக வளாகங்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளின் அருகில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. 107 முதல் 108 சதுர மீட்டர் வரையிலும், 106 முதல் 139 சதுர மீட்டர் வரையிலும், 96 முதல் 112 சதுர மீட்டர் வரையிலும் பரப்பளவு கொண்டதாக இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மின்னணு ஏலம் மூலம் இந்த குடியிருப்புகளை வாங்கலாம். ஏலத்திற்கான தகுதிகள், பணம் செலுத்தும்முறை, ஆவணங்கள் குறித்து தெளிவுபடுத்தி கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் 2026 நவம்பர் 20-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கும், முன்பணம் செலுத்துவதற்குமான கடைசிநாள் 2026 டிசம்பர் 7-ம் தேதி என்றும், மின்னணு ஏலம் டிசம்பர் 11-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை https://eauction.enivida.com என்ற இணையதளம் மூலம் அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334601&reg=3&lang=1

 

***

SS/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2334771) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी