சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தென்காசி, திருப்பூர் ஆகிய இடங்களில் புதிய ஆதார் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 12:58PM by PIB Chennai

தென்காசி, திருப்பூர் ஆகிய இடங்களில் புதிய ஆதார் சேவை மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது. தென்காசியில் 2026 நவம்பர் 6 அன்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் புதிய ஆதார் சேவை மையத்தை அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா தொடங்கி வைத்தார்.

திருப்பூரில் 2026 நவம்பர் 4 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர் ஆனந்தி புதிய ஆதார் மையத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அம்மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆதார் பதிவு, பெயர் சேர்ப்பு, புதுப்பித்தல் நடைமுறைகள் குறித்தும், அம்மையத்தின் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தப் புதிய மையங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 27 ஆதார் சேவை மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இயக்கி வருகிறது. விரைவில் மேலும் 3 மையங்களை அது திறக்க உள்ளது.

ஆதார் சேவைகளை பெற விரும்புவோர் தங்களுடைய வருகை குறித்து https://bookappointment.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

***

SS/IR/LDN/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2334384) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English