இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2026 2:51PM by PIB Chennai
மாசு ஏற்படுத்தாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை தீபாவளியைக் கொண்டாடுமாறு தில்லி தேசிய தலைநகரப் பகுதி மக்களுக்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும், இந்தியாவில் உள்ள உலக இயற்கை நிதியத்தின் (டபிள்யூடபிள்யூஎஃப்), சுற்றுச்சூழல் தொடர்பான தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு வாழ்வாதாரத் திட்டப் பிரிவான இஐஏசிபி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் (என்சிஏபி - NCAP) கீழ் வரும் 130 நகரங்களில், 2026 அக்டோபர் 20 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் நாடு தழுவிய பசுமைத் தீபாவளி இயக்கம் நடைபெறுகிறது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்படி, டெல்லியின் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. மேலும், காற்றின் தரத்திற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் கணிப்புகளின்படி, பண்டிகை நாட்களில் இது 'கடுமையான' நிலையை எட்டக்கூடும். தேசிய தலைநகர் பகுதி, அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்காக, நிலையான செயல் திட்டத்தின் கீழ் இப்பகுதி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் விதித்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறும், நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334104®=3
****
AD/PLM/RJ