சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் வெங்கட ரமண அக்கராஜு பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2026 3:59PM by PIB Chennai

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் வெங்கட ரமண அக்கராஜு 2026 நவம்பர் 3-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இது, கடல்சார் கல்வி, ஆராய்ச்சி, நிறுவனச் சிறப்பை வலுப்படுத்துவதை நோக்கிய பல்கலைக்கழகத்தின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

  

டாக்டர் அக்கராஜு இதற்கு முன் புதிய மங்களூரு துறைமுக ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். துறைமுக நிர்வாகம், கடல்சார் செயல்பாடுகள், மேலாண்மை ஆகியவற்றில் அவருக்கு ஆழ்ந்த அனுபவம் உண்டு. கடல்சார் துறையில் அவர் கொண்டுள்ள தொழில்முறை அனுபவமும் தலைமைத்துவமும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிறுவன முன்னுரிமைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கடல்சார் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உலகளாவிய கடல்சார் ஈடுபாட்டின் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சியைச் சந்தித்து வரும் ஒரு முக்கியமான காலகட்டத்தில், இவருடைய நியமனம் நிகழ்ந்துள்ளது. பல்கலைக்கழகச் சமூகம், டாக்டர் வெங்கட ரமண அக்கராஜுவை அன்புடன் வரவேற்கிறது. கடல்சார் கல்வி மற்றும் சிறப்பான செயல்பாடுகளில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைப் புதிய மைல்கற்களை நோக்கி அவர் வழிநடத்திச் செல்லும்போது, அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

***

AD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334135) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: English