இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 5:58PM by PIB Chennai
மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீதித்துறைத் துறை, அரசு அலுவலகங்களில் தூய்மையைப் பராமரிக்கவும், நிலுவைப் பணிகளைக் குறைக்கவும் சிறப்பு இயக்கம் 6-ஐ வெற்றிகரமாக செயல்படுத்தி அதை நிறைவு செய்துள்ளது.
நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு கட்டங்களாக இந்த இயக்கம் நடைபெற்றது.
இதில், பொதுமக்களின் 211 புகார்கள், 309 மேல்முறையீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 5 கோரிக்கைகள், மாநில அரசுகளின் 4 கோரிக்கைகள் உள்ளிட்ட நிலுவையில் இருந்த அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காணப்பட்டன.
புதுதில்லியில் உள்ள ஜெய்சால்மர் ஹவுஸ் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்னணுக் கழிவுகள், தேவையற்ற பழைய பொருட்கள் ஏலம் விடப்பட்டதில் ரூ.2.41 லட்சம் வருவாய் கிடைத்தது. இதன் மூலம் சுமார் 300 சதுர அடி இடம் காலியானது.
அலுவலகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்ற இந்த இயக்கம், தூய்மையான சூழலையும் விரைவான நிர்வாகச் செயல்பாட்டையும் உறுதிப்படுத்தும் நோக்கில் வெற்றிகரமாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333712®=3
***
TV/PLM/RJ