இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 8:22PM by PIB Chennai
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தனது 77-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இதையொட்டி, குவாலியரில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் தனது வரவேற்புரையில், இந்த அமைப்பு, அபின் பாப்பி பயிரிடலை முறைப்படுத்துதல், போதைப்பொருட்கள், மனோவியல் மருந்துகள், முன்னோடி வேதிப்பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைக் கண்காணித்தல், தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்துவதைத் தடுப்பதற்காக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333782®=48&lang=2
****
TV/RB/RJ