இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 6:39PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகமும், தொழில் - உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி-யும் இணைந்து, ஸ்டார்ட்அப் இந்தியா இணையதளத்துடன் ஐ-ஸ்டெம் (I-STEM) என்ற ஆராய்ச்சி வசதிக்கான இணையதளத்தின் இணைப்புக்கான வசதியை இன்று (2026நவம்பர் 6) தொடங்கின.
இதன்மூலம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சி, பரிசோதனை, மாதிரி தயாரிப்பு வசதிகளை எளிதில் கண்டறிந்து பயன்படுத்தலாம். இதனால், விலை உயர்ந்த கருவிகளைத் தனியாக வாங்குவதற்கான செலவு குறைவதுடன், ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டை விரைவுபடுத்த முடியும்.
தற்போது ஐ-ஸ்டெம் (I-STEM) இணையதளத்தில் 4,044 நிறுவனங்களில் உள்ள 31,540 அறிவியல் சாதனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த வசதி மூலம் சாதனங்களைக் கண்டறிந்து பயன்படுத்தக் கோரிக்கை அளிக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பாதுகாப்பு, பயன்பாட்டுத் தகுதி, இருப்பு, கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333736®=48&lang=2
****
TV/PLM/RJ