இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 10:13PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் 05 நவம்பர் 2026 அன்று அதன் சென்னை கிளை அலுவலகத்தில், நேரடி மற்றும் இணையவழி பங்கேற்பு முறையில், வாகன டயர் துறையுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள் மற்றும் செயல் பங்காளர்கள் பங்கேற்ற ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி டயர்கள் தொடர்பான IS 15627 – தானியங்கி வாகனங்கள் — இரு மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கான காற்றடைத்த (நியூமேடிக்) டயர்கள் — வரைவு திருத்தம் 2 என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி வாகன டயர் துறையுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள் மற்றும் செயல் பங்காளர்களை ஒன்றிணைத்து, தொழில்நுட்பக் கலந்துரையாடல், தேவைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் தொழில்துறையின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தளமாக அமைந்தது. ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியானது இந்திய தரநிலைகள் தொடர்பாக செயல் பங்காளர்களுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கும், தரநிலைகளின் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் நடைமுறை சார்ந்த கருத்துகளைப் பெறுவதற்கும் BIS வாய்ப்பளிக்கிறது.

பங்கேற்பாளர்களை வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கங்களை எடுத்துரைத்த BIS சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு.S.D.தயானந்த், தரநிலையாக்க செயல்முறையில் செயல் பங்காளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியானது பிஐஎஸ் மற்றும் செயல் பங்காளர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கான முக்கிய தளமாக விளங்குவதுடன், தரநிலைகள் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், விளக்கங்களைப் பெறவும், இந்திய தரநிலைகளை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது என்று அவர் தெரிவித்தார்.

IS 15627 – வரைவு திருத்தம் -2 குறித்த விரிவான தொழில்நுட்ப அமர்வை பிஐஎஸ் சென்னை அலுவலகத்தின் துணை இயக்குநர் திரு. ஹிதேஷ் யாதவ் நடத்தினார். முதல் திருத்தத்தின் இரண்டாவது வரைவு திருத்தத்தின் முக்கிய தேவைகள் மற்றும் விதிமுறைகளை அவர் விளக்கினார். இரண்டு மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் காற்றழுத்த டயங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதில் இத்தரநிலையின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விரிவான கலந்துரையாடலில், பரந்த அளவிலான கருத்துப் பெறுதல் நடைமுறையில் உள்ள வரைவு திருத்தம் 2 தொடர்பாக டயர் உற்பத்தியாளர்கள் மற்றும் பிற செயல் பங்காளர்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொண்டனர். கலந்துரையாடலின் போது பெறப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு, தரநிலையாக்க செயல்முறையின் பரிசீலனை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக பிஐஎஸ்-ன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத் துறைக்கு அனுப்பப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக, செயல் பங்காளர்களுடனான கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பகிர்வு அமர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் தரநிலை மற்றும் அதன் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விளக்கங்களைப் பெற்றதுடன், தங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி, செயல் பங்காளர்களுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்தி, இந்திய தரநிலைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், வாகனத் துறையில் தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை ஊக்குவிப்பதிலும் பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
***
AD/RJ