சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் குறை தீர் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 7:14PM by PIB Chennai

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், நவம்பர் 11  அன்று மாலை 4 மணிக்கு குறைதீர்க்கும் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில்  தலைமை அஞ்சலகத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை, தலைமை அஞ்சல் அதிகாரி நேரில் கேட்டறிவார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை நேரில் வந்தோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது 'DAK ADALAT' என்ற தலைப்புடன் annaroadho@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இதற்கான கடைசி தேதி நவம்பர் 10 ஆகும். தனியார் கூரியர் சேவைகள் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அஞ்சல் பொருட்கள் தொடர்பான புகார்களில், அவற்றை அனுப்பிய தேதி மற்றும் நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழு முகவரி, பதிவு செய்யப்பட்ட ரசீது எண், முன்பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அஞ்சலகத்தின் பெயர் போன்ற முழு விவரங்களும் இடம்பெற வேண்டும். மணி ஆர்டர்கள், விபி பொருட்கள் , காப்பீடு செய்யப்பட்ட பொருட்கள் அல்லது விரைவுத் தபால் தொடர்பான புகார்களுக்கும் இது பொருந்தும். சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு  அல்லது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு  தொடர்பான குறைகளைத் தெரிவிக்கும்போது, கணக்கு எண் அல்லது பாலிசி எண், வைப்பீட்டாளர் அல்லது காப்பீடு செய்தவரின் பெயர் மற்றும் முழு முகவரி, அஞ்சலகத்தின் பெயர் மற்றும் இது தொடர்பான பிற துறை சார்ந்த குறிப்பு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333752&reg=3&lang=1   

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333831) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English