இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 6:10PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி (UPSC), 2019, 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான மூத்த சுருக்கெழுத்தாளர் (தரம் ‘பி’/தரம்-1) பதவி உயர்வுக்கான துறைசார் போட்டித் தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த 2025 டிசம்பரில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு, 2026 நவம்பரில் பணிப்பதிவுகள் மதிப்பீடு அடிப்படையில், மத்திய செயலகம், இந்திய வெளியுறவுப் பணி, முப்படைத் தலைமையகம், ரயில்வே வாரியச் செயலகம் ஆகியவற்றின் தனிச்செயலர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 450 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 30 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் முப்படைத் தலைமையகப் பிரிவில் மட்டும் 26 காலிப்பணியிடங்களுக்கு 22 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சில விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நீதிமன்ற வழக்குகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இறுதித் தேர்வு முடிவுகள் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம். இறுதி முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் மதிப்பெண்கள், தேர்வு கட்-ஆஃப் விவரங்கள் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333719®=3
***
TV/PLM/RJ