இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 6:59PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான எஸ்டிஐ, சென்னை ஐஐடி-யுடனும் (ஐஐடி மெட்ராஸ்) ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
விமானங்களில் பயன்படுத்துவதற்கான, உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் தகவல் தொடர்பு அமைப்பை இணைந்து வடிவமைத்து மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தத்தில், இந்திய விமானப்படையின் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் சரப்ஜித் சிங், ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் எம்.ஜே. சங்கர் ராமன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி உடனிருந்தார்.
இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், தகவல் தொடர்பு அமைப்புகள், கணினி கட்டமைப்பு ஆகியவை மேம்பட்ட வழிமுறைகளை உருவாக்குவதற்காக, சென்னை ஐஐடியுடனும், ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளையுடனும் இணைந்து செயல்பட இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்குவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தகவல் தொடர்பு அமைப்புகளைச் சார்ந்திருப்பது குறையும். மேலும், இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறனும் மேம்படும்.
இதன் மூலம், தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு வலுசேர்ப்பதே இந்த உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333748®=3&lang=1
****
TV/PLM/RJ