நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்புத் தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 6:53PM by PIB Chennai

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை, 2026 அக்டோபர் 02 முதல் 31  வரை சிறப்பு இயக்கம் 6-ஐ வெற்றிகரமாக நடத்தியது.

தூய்மையை மேம்படுத்துதல், பணியிடத் திறனை அதிகரித்தல், முறையான பதிவேடு மேலாண்மையை உறுதி செய்தல், மின்னணுக் கழிவுகளை அகற்றுவதை எளிதாக்குதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை வலுப்படுத்துதல் போன்ற முன்முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டது.

சிறப்பு இயக்கம் 6-இன் ஒரு பகுதியாக, இந்தியா கேட் அருகே உள்ள புல்வெளிகளிலும் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 400 கோப்புகள் ஆய்வு செய்து மூடப்பட்டன. 1836 குறைகள் தீர்க்கப்பட்டன. பழைய பொருட்களை அகற்றுதல் மூலம் ரூ. 6,00,000/- வருவாய் ஈட்டப்பட்டது.

சிறப்பு இயக்கம் 6, தூய்மைக்கு அப்பாற்பட்டு நிர்வாகச் சீர்திருத்தத்தின் பரந்த இலக்குகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333744&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333825) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी