இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 7:05PM by PIB Chennai
இந்தியாவில் கச்சா எஃகின் உற்பத்தி 2026 அக்டோபரில் 14.1 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 0.7% அதிகரித்துள்ளது. 2026 ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 99.1 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ள உற்பத்தி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 96.6 மில்லியன் டன்னைவிட 2.6% அதிகமாகும். இதே போல பதப்படுத்தப்பட்ட எஃகின் உற்பத்தி, அக்டோபர் மாதத்தில் 13.4 மில்லியன் டன்னாக, கடந்தாண்டின் இதே காலகட்டத்தை விட 2.8% கூடுதலாகப் பதிவாகியுள்ளது. 2026 ஏப்ரல்- அக்டோபர் காலகட்டத்தில், உற்பத்தி 95 மில்லியன் டன்னாக, கடந்த ஆண்டை விட 3.9% அதிகமாகப் பதிவாகியுள்ளது.
எஃகு அமைச்சகத்தின் பசுமை எஃகு முன்முயற்சியின் கீழ், 2026 அக்டோபர் வரை வெளியிடப்பட்ட பட்டியல்களில் உள்ள 108 வெவ்வேறு எஃகு உற்பத்தியாளர்களுக்கு பசுமை எஃகு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333256®=3&lang=1
***
SK/BR/RJ