தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தனியார் பள்ளி ஆசிரியைகள்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 4:54PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார்க் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியைகள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தனியார் பள்ளி உரிமையாளரின் சகோதரர் தனக்கு நீண்டகாலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தன்னை பணியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும் ஆசிரியை ஒருவர் குற்றம்சாட்டினார். இதேபோன்ற தொல்லைக்கு ஆளானதாக மற்றொரு ஆசிரியையும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இச்சம்பவம் தொடர்பாக, அலிகார்க் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333133&reg=3&lang=1

****

SK/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333785) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी