பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 6.0 மூலம் நாடு முழுவதும் 19.89 லட்சம் இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 4:18PM by PIB Chennai

மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு இயக்கம் 6,0 மூலம் 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மேலும், அலுவலக மேலாண்மை, மின்னணு கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இந்த சிறப்பு இயக்கத்தின் வாயிலாக நாடு முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 19.89 லட்சம் இடங்களில் சுத்தப்படுத்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  மின்னணு கழிவுகள் அகற்றப்பட்டதன் மூலம் 970.33 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 9.96 லட்சம் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அலுவலக மேலாண்மை மூலம் தேவையற்ற 15.77 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, சுகாதாரம், சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களும் இந்த சிறப்பு இயக்கம் 6.0 மூலம் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333604&reg=3&lang=1 

***

TV/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333759) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu