சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மூலம் சர்வதேச ஆராய்ச்சிப் படிப்பை தொடரும் இளைஞர்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 3:17PM by PIB Chennai

28 வயதான ஆரவ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மின்னணு, மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டப் படிப்பு பயின்று வருகிறார். வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பை தொடர வேண்டும் என விரும்பிய அவருக்கு, நிதிச்சுமை தடையாக இருந்தது. இந்நிலையில், மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மூலம், ஆரவ் குமாரின் படிப்பு சூழல் மாறியது. இத்திட்டத்தின் கீழ் அவருக்கு 2024 அக்டோபர் 1-ம் தேதி அன்று வழங்கப்பட்ட நிதி, கல்விக் கட்டணம், அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது. இதன்மூலம், முனைவர் பட்டப் படிப்பை வெளிநாட்டில் எவ்வித நிதிச் சுமையும் இன்றி பயின்று வருகிறார். மின்னணு, மின்பொறியியல் துறையில் சாதிக்க இந்த கல்வி உதவித்தொகை மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்ட ஆரவ் குமார், குடும்ப உறுப்பினர்கள், கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்போடு உயர்கல்வி படிப்பு சாத்தியமானதாகவும் கூறினார். ஆரவ் குமாரின் இந்த பயணம், பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் உலகளாவிய அறிவு மற்றும் ஆராய்ச்சி சூழலில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333564&reg=3&lang=1 

***

SS/LN/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2333751) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी