இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 4:14PM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) EPS-95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், தங்களது மாதாந்திர ஓய்வூதியம் தடையின்றித் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய வருடாந்திர டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை (Digital Life Certificate) உடனே சமர்ப்பிக்குமாறு மதுரை மண்டல வைப்பு நிதி ஆணையர் திரு K சிசுபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்சான்றிதழைச் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் இனி இபிஎஃப்ஓ அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. ஜீவன் பிரமாண் இணையதளம் (jeevanpramaan.gov.in), ஸ்மார்ட்போனில் உள்ள முக அங்கீகார (Face Authentication) வசதி, அருகில் உள்ள தபால் நிலையங்கள் (IPPB) அல்லது பொது சேவை மையங்கள் (CSC) மூலமாக எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.
சான்றிதழ் சமர்ப்பிக்க ஆதார் எண், பிபிஓ எண், வங்கி கணக்கு எண் மற்றும் அலைபேசி ஆகியவை அவசியமாகும். ஓய்வூதியத் தொகையைத் தடையின்றிப் பெற உரிய காலத்தில் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு epfindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
***
TV/SU