சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கோட்ட அளவிலான தபால் குறைதீர் முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 3:42PM by PIB Chennai

தபால் துறை சார்பில் கோட்ட அளவிலான தபால் குறைதீர் முகாம் (Dak Adalat) நவம்பர் 13-ஆம் தேதி மாலை 03.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் வாடிக்கையாளர்களின் குறைகள் நேரடியாகக் கேட்டறியப்படும். இம்முகாம் தியாகராயா நகர் வடக்கு அஞ்சலக வளாகம் (முதல் தளம்), வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயாநகர், சென்னை 600017 என்ற முகவரியில் உள்ள தென் சென்னை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெறும். தென் சென்னை கோட்டத்தின் கோட்ட அளவிலான தபால் குறைதீர் முகாமின் தலைவர், தபால் துறையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிவார். வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தென் சென்னை கோட்டம், வடக்கு உஸ்மான் சாலை, சென்னை - 600017 என்ற முகவரிக்கு 09.11.2026 அல்லது அதற்கு முன்னதாக அனுப்பலாம்.

அஞ்சல் கடிதங்கள் தொடர்பான புகார் எனில், அனுப்பிய தேதி மற்றும் நேரம், அனுப்புநரின் முழு முகவரி, பெறுநரின் முழு முகவரி, மணியார்டர் (MO), மதிப்புத் தொகை செலுத்த வேண்டிய தபால் (VP), பதிவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் அல்லது விரைவு தபால் (Speed Post) ஆகியவற்றிற்கான பதிவு ரசீது எண் மற்றும் பதிவு செய்த தேதி மற்றும் பதிவு செய்த அஞ்சலகத்தின் பெயர் ஆகிய முழுமையான விவரங்கள் புகாரில் குறிப்பிடப்பட வேண்டும். சேமிப்பு திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) அல்லது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) தொடர்பான புகார் எனில், கணக்கு எண் / காப்பீட்டுக் கொள்கை எண், வைப்பாளர் / காப்பீட்டுதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர் மற்றும் தபால் துறையிடமிருந்து பெறப்பட்ட ஏதேனும் குறிப்பு ஆகிய விவரங்கள் புகாரில் குறிப்பிடப்பட வேண்டும்.

புகார்கள் சாதாரண தபால் அல்லது விரைவு தபால் (Speed Post) மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கவரில் “Division Dak Adalat - Chennai City South Division" எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

***

TV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333591) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: English