இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 1:59PM by PIB Chennai
இந்தியா – அமெரிக்கா முப்படைகள் இணைந்து நடத்திய 5-வது 'டைகர் ட்ரையம்ஃப்' 2026 (TIGER TRIUMPH) கூட்டுப் பேரிடர் மீட்பு, நிவாரணப் பயிற்சி, நவம்பர் 5-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது.
அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்ற இப்பயிற்சியில் இரு நாடுகளின் முப்படை வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், கூட்டுப் பேரிடர் மீட்புப் பணிகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், கடல்சார் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. மேலும், இணையப் பாதுகாப்பு, மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் நிபுணர்கள் தங்கள் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பயிற்சி, இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை வலுப்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இப்பயிற்சி எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333530®=3&lang=1
***
TV/PLM/SU