தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உத்தரப்பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 4:52PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த 12 வயது மாணவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆசிரியர்களின் உத்தரவின்பேரில், மாணவர் அங்குள்ள மேற்கூரையில் ஏறி மதிய உணவுக்கான சுரக்காயை பறித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக சென்ற மின்சார கம்பி உரசி மாணவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், உத்தரப்பிரதேச மின்கழக தலைவர், பல்லியா மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக, ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333131®=3&lang=1
***
SK/LN/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2333555)
வருகையாளர் எண்ணிக்கை : 26